ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் மிக அதிகமான பங்கு இந்தியர்களே என்ற போதிலும் இதுவரை வந்த எந்த இந்தியத் திரைப்படங்களிலும் துபாய் உறவு பற்றி பெரிதாக காண்பித்து விடவில்லை. பாலிவுட் படங்களில் கூட பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் இருக்குமே தவிர படத்தில் இடம் பெரும் காட்சிகள் துபாய் வாழ் இந்தியா மக்களை பற்றி பெரிதாக காட்டிவிடவில்லை. சமீபத்தில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டாலும் சண்டை காட்சிகள், விமான கடத்தல் போன்ற காட்சிகள் தான் அதிகம். அமீரகத்தில் தமிழ் வானொலி மற்றும் எப்.எம் இயங்கி வந்தும், நெறைய தமிழ் சங்கங்கள் இருந்தும் தமிழ் படங்களில் துபையின் முகத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்கையில் இந்தியாவிற்கு வந்து ஒரு அரேபியப் படம் எடுத்தால் எப்படி இருக்கும், அதுவும் இரு நாட்டு நல்வுறவை வளர்க்கும் படம் எடுக்க இருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தின் திரைப்படத்துறை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. அமீரகத்தை சேர்ந்த நய்லா அல் ஹாஜா என்கிற ஒரு பெண் 'மல்லால்' என்கிற ஒரு படத்தை தென் இந்தியாவில் எடுக்க இருக்கிறார். அரபிய மொழியில் மல்லால் என்றால் போர் (boring) என்று அர்த்தமாம். அமீரகத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தனது தேன்நிலவு பயணமாக கேரளாவின் மூணாறு பகுதிக்கு செல்கிறாள். சென்ற வருடம் துபாய் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான முதல் பரிசை வென்ற இந்த கதையை அபு தாபியின் டூ போர் 54 (Two four 54) என்கிற நிறுவனம் தாயரிக்க இருக்கிறது. இதை பற்றி அதன் இயக்குனர் கூறுகையில் "இந்திய அமீரகத்தின் கலாசார உறவுகளை பற்றி இதுவரை எந்த படமும் காட்டவில்லை, அமீரகத்தின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு ரொம்ப அதிகம்" என்று கூறுகிறார்.இது பற்றி நய்லா அல் ஹாஜாவை தொடர்பு கொண்டு பேசுகையில் இதன் படப்பிடிப்பு புனித ரமலான் மாதத்தில் (ஆகஸ்ட் பாதியில்) துவங்கி வரும் டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.